ஷார்ஜா-வில் இலவச மருத்துவ முகாம்

30.03.2007, வெள்ளிக் கிழமை அன்று ஷார்ஜா முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக இலவச மருத்துவ முகாம் ஷார்ஜா கல்ஃப் ஸ்டார் மெடிக்கல் சென்டரில் நடைபெற்றது. பொது மருத்துவம், அறுவை சிகிச்சை ஆலோசனை, மகளிர் மற்றும் குழந்தைகள் நலம், பல் சிகிச்சை, Orthopaedic,C.T.Scan, X-Ray, Ultrasound – போன்ற மருத்துவ சேவைகள் பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முமுக மருத்துவ அணி செயலாளர் முஹம்மது இஸ்மாயில் தலைமையிலான மருந்தாளுணர்கள் குழுவினர் இலவச மருந்துகள் வழங்கினர்.

இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற்று பயனடைந்தனர்.